முகப்பு
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் மீண்டும் சேவை!

சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:21 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு மற்றும் வருகை வழக்கம்போல் நடைபெறுகிறது. மழைநீர் தேங்கியதால் மூடப்பட்ட சென்னை விமானத்தில் விமான சேவை மீண்டும் தொடங்கியது.

பல விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தாங்கள் முன்பதிவு செய்துள்ள விமானங்கள் இயங்குவது குறித்து அந்தந்த நிறுவனங்களிடம் தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மோசமான வானிலை தொடர்வதால் தற்காலிகமாக மூடப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்தது. விமான நிலைய ஒடுபாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு, மழை நீரை வெளியேற்றினர்.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 89 விமானங்கள், சென்னைக்கு வரவேண்டிய 88 விமானங்கள்  என 177 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று குறைந்த அளவு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →