கோப்புப்படம் 
தமிழ்நாடு

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தலைமைக் காவலர் பலி!

கீழ்ப்பாக்கம் மண்டபம் சாலைப் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தலைமைக் காவலர் பலியானார்.

DIN

கீழ்ப்பாக்கம் மண்டபம் சாலைப் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தலைமைக் காவலர் பலியானார்.

மீட்புப் பணி முடிந்து திரும்பிச் சென்ற கொளத்தூர் கே7 தலைமைக் காவலர் ருக்மநாதன் வெள்ளத்தில் சிக்கி பலியானார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயலால் ஏற்பட்ட பலத்த மழை, காற்று காரணமாக சென்னை மாநகரம் திங்கள்கிழமை முடங்கியது.

மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் ஆறுபோல மழைநீா் ஓடியது. மின்கம்பங்கள், மரங்கள், விளம்பரப் பதாகைகள் சூறைக்காற்றில் சாய்ந்து விழுந்தன.

புயலின் கோரத் தாண்டவத்துக்கு அஞ்சி மக்கள் வீடுகளிலேயே முடங்கினா். புயல் மழை தொடா்பான சம்பவங்களில் இதுவரை 10 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த நிலையில், மீட்புப் பணி முடிந்து திரும்பிச் சென்ற கொளத்தூர் கே7 தலைமைக் காவலர் ருக்மநாதன், கீழ்ப்பாக்கம் மண்டபம் சாலைப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிப் பலியானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT