தமிழ்நாடு

மிக்ஜம் புயல் கரையை கடக்கத் தொடங்கியது!

மிக்ஜம் புயல் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திருக்கு இடையே கரையை கடக்கத் தொடங்கியது.

DIN


சென்னை: மிக்ஜம் புயல் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திருக்கு இடையே கரையை கடக்கத் தொடங்கியது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் திங்கள்கிழமை முற்பகலில் தீவிர புயலாக வலுப்பெற்றது.

நேற்று பிற்பகல்வரை சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 90 கி.மீ. தொலைவு வரை நெருங்கி வந்த நிலையில், ஆந்திரக் கரையை நோக்கி சென்னைக்கு வடக்கே நெல்லூருக்கு தென்கிழக்கே மாலை நகரத் தொடங்கியது.

தற்போது நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திருக்கும் இடையே பாபட்லாவிற்கு அருகே புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. புயல் முழுமையாக கரையை கடக்க இன்று முற்பகல் ஆகிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நெல்லூர் சுற்றுப்புற பகுதிகளில் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால் மக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT