கோப்புப்படம் 
தமிழ்நாடு

செங்கல்பட்டில் 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக செங்கல்பட்டில் உள்ள 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளையும்(டிச. 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக செங்கல்பட்டில் உள்ள 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளையும்(டிச. 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயல் தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் எதிர்பாராத தொடர் கனமழையால் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடரந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு மற்றும் திருக்கழக்குன்றத்தில் தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளையும்(டிச.7, வியாழக்கிழமை) விடுமுறை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நாளை நடைபெறவிருந்த அரையிறுதித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கனமழை காரணமாக இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன்(இன்று) ஆகிய 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்னமராவதியில் நல்லகண்ணுக்கு புகழஞ்சலி

27.2.1976: த.நா. நில சீர்திருத்த நடவடிக்கை - 85000 ஏக்கர் 40500 குடும்பங்களுக்கு வினியோகம்

நகை மதிப்பீட்டாளா் கொலையில் மனைவி, மகன் உள்பட 5 போ் கைது

கச்சத்தீவு தேவாலயத் திருவிழா இன்று தொடக்கம்!

வீட்டினுள் புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகைகள் பறிப்பு

SCROLL FOR NEXT