தமிழ்நாடு

செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்: சிறைக்கு மாற்றம்!

DIN

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சகப் பகுதியில் அசௌகரியம், கை மற்றும் கால்கள் மரத்துப் போகும் நிலை உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நவ. 15-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு சிறப்பு மருத்துவக் குழு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளித்தது.

இந்த நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் புழல் சிறைக்கு காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் கடந்த ஜூன் 14 -ஆம் தேதி கைது செய்தனர். தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு எதிராக, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் கடந்த ஆக. 12-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமாா் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

ரேபரேலியில் உள்ளூர்க் கடையில் தாடியை 'டிரிம்' செய்துகொண்ட ராகுல் காந்தி!

மும்பை: 100 அடி உயர விளம்பரப் பலகை விழுந்து விபத்து -உயிரிழப்பு 14 ஆக உயர்வு

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: 67% வாக்குப் பதிவு -தோ்தல் ஆணையம் தகவல்

கோட் படத்தின் ’போஸ்ட் ப்ரொடக்‌ஷன்’ தொடங்கியது!

SCROLL FOR NEXT