தமிழ்நாடு

'அர்ப்பணிப்புமிக்க பொதுவாழ்க்கையின் அடையாளம்' - சோனியாவுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

DIN

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் பலரும் இன்று(டிச. 9) கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 

'அர்ப்பணிப்புமிக்க பொதுவாழ்க்கைக்கு அடையாளமாக விளங்கும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ விழைகிறேன்.

சோனியா காந்தியின் ஆழ்ந்த தொலைநோக்கும் அனுபவச் செல்வமும் எதேச்சாதிகார சக்திகளிடம் இருந்து இந்தியாவைப் பாதுகாக்கும். நம் ஒன்றிணைந்த முயற்சிக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தொடர்ந்து அமைந்திடட்டும்!' என்று வாழ்த்து கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT