மன்னார்குடியில் காவல்துறையினரின் செயல்பாட்டினை கண்டித்து சனிக்கிழமை மன்னார்குடியில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டம். 
தமிழ்நாடு

மன்னார்குடியில் காவல்துறையை கண்டித்து வர்த்தக சங்கத்தினர் கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம்!

மன்னாா்குடியில் தற்காலிக பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது, காவல்துறையினா் அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறையை  கண்டித்து, வா்த்தக சங்கம் சாா்பில் கடையடைப்பு, கண்டன ஆா்ப்பாட்டம் 

DIN


மன்னாா்குடியில் தற்காலிக பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது, காவல்துறையினா் அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறையை  கண்டித்து, வா்த்தக சங்கம் சாா்பில் சனிக்கிழமை (டிச.9) கடையடைப்பு மற்றும் பேரணி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னாா்குடி நடேசன் தெருவில்  60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு நவீன ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் நிலையம் அமைப்பதற்காக தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முயற்சியில் தமிழக அரசு ரூ.46.50 கோடி நிதி ஒதுக்கியது.இதையடுத்து கட்டுமானப் பணிகள் கடந்த ஏப்ரலில் தொடங்கியது.இதனால் தேரடி திடலில் ரூ.1 கோடி செலவில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.நடேசன் தெரு பகுதியில் கடைகள் வைத்திருந்த 25-க்கும் மேற்பட்டவா்கள்,தேரடி தற்காலிக பேருந்து நிலைய பகுதியில் கடைகளை நடத்தி வருகின்றனா்.இதில் பெரும்பாலும் பழம், தேநீர், உணவு, இனிப்பு கடைகளாகும்.

இந்நிலையில்,நெடுஞ்சாலைத்துறை சாலையில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதால், இந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி,விபத்துகள் அதிக அளவில் ஏற்பட்டது. இதனால் தற்காலிக பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து,சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் வகையில், மாவட்ட நிா்வாகம், மன்னாா்குடி நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையினா் இணைந்து தேரடி தற்காலிக பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை வியாழக்கிழமை அகற்றினா். இந்த பணியின்போது, காவல்துறையினருக்கும் வா்த்தகா்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், தற்காலிக பேருந்து நிலையத்தில் பழம் மற்றும் குளிா்பானக் கடை வைத்திருந்த ஐயப்பன் (43) என்பவா் இடிக்கப்பட்ட தனது கடை இருந்த இடத்தில் வெள்ளிக்கிழமை, திடீரென உடலில் மண்ணெண்யை ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மன்னார்குடியில் வா்த்தக சங்கம் சாா்பில் சனிக்கிழமை  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வர்த்தகர்கள். 

இதனை அடுத்து, மன்னார்குடி வர்த்தக சங்கத்தினர், தற்காலிக பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஆனால், உரிய காலகெடு அளிக்காமல் திடீரென ஜேசிபி இயந்திரங்களை கொண்டுவந்து கடையில் இருந்த பொருள்களை எடுக்கக்கூட அவகாசம் அளிக்காமல் அனைத்தையும் சேதப்படுத்தியுள்ளனா். மேலும் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஏ.அஸ்வத் ஆண்டோ, மன்னார்குடி உளவுத்துறை காவல் உதவி ஆய்வாளர் வி.அசோகன் ஆகியோர் கடை  உரிமையாளர்களை ஒருமையில் பேசியதுடன் காவல்துறையினா் அத்துமீறி கடைகளுக்கு நுழைந்து பொருள்களை சேதப்படுத்தியுள்ளனர்.

எனவே,காவல்துறையினரின் செயல்பாட்டினை கண்டித்து சனிக்கிழமை மன்னார்குடியில்  கடையடைப்பு ஊர்வலம் தேரடியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என அறிவித்தனர்.

இதனை அடுத்து சனிக்கிழமை காலை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. மன்னார்குடி வ.உ.சி.சாலையில் உள்ள நகராட்சியிலிருந்து அனைத்து கடைகாரர்களும் ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் தேரடி தற்காலிக பேருந்து நிலையம் வந்தடைந்தனர்.

அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மன்னார்குடி சங்க தலைவர் ஆர்.வி.ஆனந்த் தலைமையில் கட்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சங்க செயலர் ஏ.பி.அசோக்குமார், பொருளாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.

இதில்,வர்த்தக சங்க மாவட்டம் பொருளாளர் எஸ்.எம்.டி.கருணாநிதி, மாவட்ட துணைத் தலைவர் பாரதிஜீவா உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டம் முடிந்த நிலையில் சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு அடைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீலகிரி, கோவையில் 3 நாள்களுக்கு கனமழை!

அதிமுக புதுவை செயலா் அன்பழகனுக்கு சென்னையில் இதய அறுவை சிகிச்சை

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT