கோப்புப்படம் 
தமிழ்நாடு

புயல் நிவாரணப் பணி: முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

DIN

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

தமிழ்நாட்டில் மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சேகர்பாபு, டி.ஆர்.பி.ராஜா, மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT