தமிழ்நாடு

தாம்பரம் கால்வாயில் ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்கள்:மக்கள் அதிர்ச்சி

தாம்பரம் கால்வாயில் ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டிருப்பதைப் பாா்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

DIN


சென்னை: மிக்ஜம் புயல் வெள்ள பாதிப்பால் மக்கள் பால் பாக்கெட் கிடைக்கமால் அவுதியுற்ற நிலையில், தாம்பரம் கால்வாயில் ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டிருப்பதைப் பாா்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

“மிக்ஜம்” புயலால் முன் எப்போதும் இல்லாத வகையில் இடைவிடாது பெய்த அதிகன மழையின் காரணமாக சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்புகுள்ளானது. மிக்ஜம் புயல் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டிப்போட்டுவிட்டது. உணவு, குடிநீா், பால், மின்சாரம், தகவல் தொடர்பின்றி மிகவும் வேதனைக்குள்ளாகினர்.

பாதிக்கப்பட்ட சென்னையில் புயல் சீரமைப்புப் பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

மழை வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்டை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.பாதிப்பிற்குள்ளான குடும்பங்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்களை பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலமும் வழங்கப்பட்டு வருகின்றன. 

மிக்ஜம் புயல் வெள்ள பாதிப்பால் மக்கள் பால் பாக்கெட் கிடைக்கமால் அவுதியுற்ற நிலையில்,தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குளக்கரைக்கு பின்புறமாக உள்ள கால்வாயில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டிருந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT