தமிழ்நாடு

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கியது!

DIN

சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததையடுத்து, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

தூத்துக்குடியில் இருந்து சென்னை துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில், ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

ரயிலின் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியதால் தண்டவாளத்தை சீரமைத்து ரயில் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டனர். 

இதனால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களும் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. 

தற்போது மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் ரயில் சேவை சீராகியுள்ளது. செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில் சேவை இன்று(திங்கள்கிழமை) மாலை மீண்டும் தொடங்கியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

SCROLL FOR NEXT