கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் தெரிவித்துள்ளதாவது:  

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் திங்கள் முதல் சனி (டிச.11-16) வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 3 மணி நேரத்திற்கு திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

சென்னை, புறநகா் பகுதிகளில் திங்கள், செவ்வாய் (டிச.11-12) நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் . நகரில் பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வாநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமூக நலத்துறையில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

மோடியின் வெற்றியை கேள்விக்குறியாக்கும் வாரணாசி வாக்காளர் பட்டியல்.! 50 பேருக்கு ஒரே தந்தை.!

ரஜினி - 50 ஆண்டுகள்! 50 திரைப்படங்கள்!

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்!

SCROLL FOR NEXT