முகப்பு
தமிழ்நாடு

ரஜினிகாந்துக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்!

நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:25 PM
கோப்புப்படம்
பகிர்:

நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி, திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளத்தில், 'அன்பிற்கினிய நண்பர் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், ரஜினிகாந்தை தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை முதல்வர் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →