மிக்ஜம் புயல் நிவாரணப் பணியின்போது சிறப்பாக செயல்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  
தமிழ்நாடு

சிறப்பாக செயல்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றிதழ்!

மிக்ஜம் புயல் நிவாரணப் பணியின்போது சிறப்பாக செயல்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

DIN

மிக்ஜம் புயல் நிவாரணப் பணியின்போது சிறப்பாக செயல்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

தமிழ்நாட்டில் மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருந்ததால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இன்னும் ஒரு சில பகுதிகளில் மீட்புப்பணி தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், மிக்ஜம் புயல் மீட்புப் பணியின்போது சிறப்பாக செயல்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 3,449 பேருக்கு தலா ரூ. 4,000 ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(செவ்வாய்க்கிழமை) வழங்கினார். 

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கிய குப்பை மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 3,449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களுக்கு தலா ரூ. 4,000 என மொத்தம் ரூ. 1,37,96,000 ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கும் அடையாளமாக 15 தூய்மைப் பணியாளர்களுக்குமுதல்வர்  ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் உடனிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸில் கடுமையாக தாக்கிக் கொண்ட போட்டியாளர்கள்! யாருக்கெல்லாம் ரெட் கார்டு?

பிகாரில் பெண்களின் நலத்திட்டங்களை நிறுத்த ஆர்ஜேடி முயற்சி: ஸ்மிருதி ராணி!

சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது! ஐடி, ஆட்டோ பங்குகள் சரிவு!

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

SCROLL FOR NEXT