முகப்பு
தமிழ்நாடு

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்: முதல்வர் கண்டனம்

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:25 PM
கோப்புப்படம்
பகிர்:

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:

"முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடாளுமன்ற மக்களவைக்குள்ளேயே அரங்கேறியுள்ள பாதுகாப்பு மீறல் நமது மக்களாட்சியின் உயரிய கோயிலான நாடாளுமன்றத்துக்கும் பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கியிருக்கிறது.

இதில் தாமதமில்லாத உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உரிய விசாரணை மேற்கொண்டு, இதற்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிந்து, இனி இப்படி நடக்காத அளவுக்குப் பாதுகாப்பு நடைமுறைகளைச் செயல்படுத்தி, மக்களாட்சியின் மிக முக்கியமான அமைப்பான நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை நம்மிடம் உள்ள அனைத்து வலிமையையும் கொண்டு உறுதிசெய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →