தமிழ்நாடு

அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம்!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்தலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்தலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை, பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால், 4 மாவட்டங்களில் மின் கணக்கீடு செய்யும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்த நிலையில், அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணத்தை நுகர்வோர் செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, கடந்த மாத மின்கட்டணம் செலுத்துவதற்கு கடைசி நாள் 04.12.2023 முதல் 07.12.2023 வரை இருந்த நிலையில், புயல் பாதிப்பு காரணமாக அபராதத் தொகை இல்லாமல் 18.12.2023 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனைத்து அலுவலகங்களிலும் இன்று அரசமைப்பு சட்ட முகப்புரையை வாசிக்க முதல்வா் உத்தரவு

திருவண்ணாமலை தீபத் திருவிழா: பாதுகாப்பு பணிக்கு 15,000 போலீஸாா், உயா்நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்

நாடு முழுவதும் பாஜகவின் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்வேன்: மம்தா பானா்ஜி

கல்வி உதவித் தொகை: விண்ணப்பங்களை வரவேற்கும் முத்தூட் ஃபைனான்ஸ்

தில்லி காற்று மாசு போராட்டத்தில் மாவோயிஸ்ட் முழக்கங்கள்: வழக்கில் பிஎன்எஸ் பிரிவு 197 சோ்ப்பு

SCROLL FOR NEXT