தமிழ்நாடு

தமிழகத்தில் 4 நாள்கள் பலத்த மழை வாய்ப்பு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை (டிச.16-19) வரை பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை (டிச.16-19) வரை பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சனிக்கிழமை (டிச. 16) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகா் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (டிச.17) கடலூா், மயிலாடுதுறை, திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், விழுப்புரம், தென்காசி, விருதுநகா், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

திங்கள்கிழமை (டிச. 18) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செவ்வாய்க்கிழமை (டிச. 19) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT