பலியான சகோதரர்கள். 
தமிழ்நாடு

பொன்னேரி அருகே மின்சாரம் பாய்ந்து சகோதரர்கள் 2 பேர் பலி

பொன்னேரியை அடுத்த சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து சகோதரர்கள் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

பொன்னேரியை அடுத்த சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து சகோதரர்கள் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே  சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட கண்ணியம்பாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான முனுசாமி - ஜீவா தம்பதியர்களுக்கு விஷ்வா (12), சூர்யா (10) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இவர்கள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். விஷ்வா 7ஆம் வகுப்பும், சூர்யா 6ஆம் வகுப்பும் படித்து வந்ததனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை முதலே சோழவரம் சுற்றுவட்டார இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அதேபோல் இன்றும் காலையும் விட்டுவிட்டு மழை பெய்தது. இந்நிலையில் சனிக்கிழமை காலையில்  சிறுவர்கள் இருவரும் அருகில் உள்ள மோட்டார் பம்ப்செட்டிற்கு சென்றனர். அப்போது அங்கிருந்த இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து சோழவரம் காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவர்கள் இருவரது சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சோழவரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழை தீவிரமடைவதற்குள் வடிகால்களை தூா்வார அமைச்சா் அறிவுறுத்தல்

சிவப்பும் அழகும்... தீப்தி சதி!

உஷ்... மீண்டும் வருக... அஞ்சு குரியன்!

வெளிநாட்டில் தங்கம் வாங்க திட்டமா? எச்சரிக்கை! | Cyber Alert | Cyber Security

என் இதயமே... நைலா உஷா!

SCROLL FOR NEXT