கோப்புப்படம் 
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

DIN

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சனிக்கிழமை (டிச. 16) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தஞ்சை, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் வெற்றியாளர் யார்? முன்னாள் போட்டியாளர்கள் கருத்து!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 30

இஸ்ரேல் தாக்குதலில் அக்.10 முதல் 100 பாலஸ்தீன குழந்தைகள் கொலை! - ஐ.நா. தகவல்

சென்னை திரும்பிய விஜய்! | TVK | Karur | CBI

தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் பிக் பாஸ் குழு!

SCROLL FOR NEXT