கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஆவடி அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார்: அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பிய ஓட்டுநர்

சென்னை அடுத்த ஆவடி அருகே பருத்திபட்டு பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கார் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். 

DIN


ஆவடி: சென்னை அடுத்த ஆவடி அருகே பருத்திபட்டு பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கார் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். 

ஆவடி - பூந்தமல்லி சாலையில் பருத்திப்பட்டு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன்பகுதியில் தீப்பற்றிக் கொண்டது. இதனை அறிந்து சுதாகரித்துக் கொண்ட ஓட்டுநர் அனீஸ்  காரை நிறுத்திவிட்டு உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினார்.

சில நிமிடங்களில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.கார் முழுவதும் எரிந்து நாசமானது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT