வீடுகளில் புகுந்த வெள்ளநீர் 
தமிழ்நாடு

நெல்லையில் கனமழை: மருத்துவமனை, வீடுகளில் வெள்ளம்!

நெல்லை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்துவருவதால், பல்வேறு வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

DIN

நெல்லை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்துவருவதால், பல்வேறு வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

நெல்லை அரசு மருத்துவமனையிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் நோயாளிகள், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஊழியர் சார்பில் மருத்துவமனையில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. 

எனினும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது. 

அரசு மருத்துவமனையில் புகுந்த வெள்ள நீர்

இதேபோன்று தொடர் கனமழை காரணமாக நெல்லையப்பர் கோயிலையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கோயிலைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். 

பல்வேறு முக்கிய சாலைகளில் வெள்ள நீர் தேங்குவதால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளநீர்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் ஒட்டப்பிடாரம் இணைப்புச் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT