முகப்பு
தமிழ்நாடு

நெல்லையில் தகவல் தொடர்பு சேவை பாதிப்பு!

நெல்லையில் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பிஎஸ்என்எல் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:28 PM
கோப்புப்படம்
பகிர்:

நெல்லையில் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பிஎஸ்என்எல் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

பிற செல்போன் நிறுவன சேவைகளும் சரிவர இயங்காததால் நெல்லையில் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. 

தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து அதி கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். நெல்லை சந்திப்பு பகுதியில் சிக்கி இருக்கும் பொது மக்களை படகுமூலம் மீட்புப் படையினர் மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், நெல்லையில் பாதிக்கப்பட்ட உறவினர்களை தொடர்புகொள்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →