தமிழ்நாடு

கனமழை: பாளையங்கோட்டையில் அமைச்சர் ஆலோசனை!

கனமழை பாதிப்பு தொடர்பாகவும், முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்த ஆலோசனை நடைபெற்றது. 

DIN

நெல்லை பாளையங்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. 

கனமழை பாதிப்பு தொடர்பாகவும், முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்த ஆலோசனை நடைபெற்றது. 

தொடர் கனமழை காரணமாக நெல்லை மாநகரின் பெரும்பலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 

நெல்லை நகரிலிருந்து வண்ணாரப்பேட்டைக்குச் செல்லும் வடக்கு புறவழிச்சாலை ஆற்று பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட அறிவியல் மையம், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் தெரியாத அளவிற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது.

நெல்லை சந்திப்பு சிந்து பூந்துறை மேகலிங்கபுரம் உடையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் தாமிரபரணி வெள்ளம் சூழ்ந்துள்ளது அங்கும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனையில் ஈடுபட்டார். 

இதில், வெள்ள பாதிப்புகள் தொடர்பாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT