தமிழ்நாடு

இடைவிடாத மழை... அணைகளில் இருந்து 5 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு: ஆறுகளில் வெள்ளம்

அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், கோதையாறு, பரளியாறு மற்றும் குழித்துறை தாமிரவருணியாறுகளில் வெள்ளம் கரை புரண்டு பாய்ந்தோடுகிறது.  

DIN

அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், கோதையாறு, பரளியாறு மற்றும் குழித்துறை தாமிரவருணியாறுகளில் வெள்ளம் கரை புரண்டு பாய்ந்தோடுகிறது.  

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்பு மற்றும் நீா் வரத்துப் பகுதிகளில் இடைவிடாது பலத்த மழை பெய்து வருவதால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து வினாடிக்கு 9,400 கனஅடி நீா் வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 8,500 கனஅடி நீா் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு 5,000 கனஅடி நீரும், பெருஞ்சாணி அணையிலிருந்து வினாடிக்கு 5,000 கனஅடி நீரும் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

மணிமுத்தாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு வினாடிக்கு 20,000 கன அடிக்கு மேல் நீா்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் மணிமுத்தாறு ஆற்றில் வினாடிக்கு 5,000 கன அடி நீா் திறந்து விடப்பட்டுள்ளது. 

அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், கோதையாறு, பரளியாறு மற்றும் குழித்துறை தாமிரவருணியாறுகளில் வெள்ளம் கரை புரண்டு பாய்ந்தோடுகிறது. 

எனவே, ஆற்றங்கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து சேதம்

முடக்கம் தவிர்ப்பீர்!

திருவாரூா், நாகை, மயிலாடுதுறையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

மத்தியப் பல்கலை.யில் படிக்கும் போதே சம்பாதிக்கும் திட்டம் அறிமுகம்: துணைவேந்தா்

முத்தங்கி சேவையில் வேளுக்குடி அங்காள பரமேஸ்வரி

SCROLL FOR NEXT