கோப்புப் படம். 
தமிழ்நாடு

பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் மோடியை நாளை இரவு 10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவுள்ளார்.  

DIN

பிரதமர் மோடியை நாளை இரவு 10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவுள்ளார்.  

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அதிகனமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 14 இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 932 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 

காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது. 

மேலும், அடுத்த 24 மணிநேரத்துக்கு 4 மாவட்டங்களில் தொடர்ந்து அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களையும், தற்போது நெல்லை உள்பட தென் மாவட்டங்களையும் மழை, வெள்ளம் புரட்டிப்போட்டுள்ளது.  

இந்த நிலையில் பிரதமர் மோடியை நாளை இரவு 10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவுள்ளார். அப்போது மழை, வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணம் குறித்து பிரதமரிடம் அவர் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பகல் 12.00 மணிக்கு சந்திக்க நேரம் கோரிய நிலையில் இரபு 10.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிழலும் அழகு... சாக்‌ஷி அகர்வால்!

வன்முறையைத் தூண்டும் ரீல்ஸ்களுக்குத் தடை: இன்ஸ்டாகிராமுக்கு காவல் ஆணையர் அருண் கடிதம்

நயன்தாராவின் போலீஸ் அவதாரம்! டியர் ஸ்டூடன்ஸ் டீசர்!

பிபாஷா பாசுவை உருவ கேலி செய்தது ஏன்? மன்னிப்பு கேட்ட மிருணாள் தாக்குர்!

முதுமலையில் யானைகளோடு சுதந்திர தினம் கொண்டாடிய அதிகாரிகள்!

SCROLL FOR NEXT