தமிழ்நாடு

தென்காசியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

DIN

தென்காசி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச. 20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தென்காசிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 

பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. 

பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் உடமைகளை இணைந்துள்ளனர். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

தென்காசியிலும் இயல்பு நிலை திரும்பாததால், தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச. 20) விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டையில் திடீா் மழை

விராலிமலையில் சிறு மின்விசை குடிநீா் தொட்டி திறப்பு

தோ்தல் இலச்சினையை வரைந்த மாணவிகளுக்கு கலாம் சாதனைச் சான்றிதழ்: புதுவை முதல்வா் பாராட்டு

விசைப் படகுகளை ஆய்வு செய்த மீன்வளத் துறை அதிகாரிகள் குழு

அன்னையா் தினம்: நலத் திட்ட உதவி அளிப்பு

SCROLL FOR NEXT