முகப்பு
தமிழ்நாடு

விமான டிக்கெட் எடுத்து தருவதாக பணம் மோசடி செய்தவா் கைது

சென்னையில் விமான டிக்கெட் எடுத்து தருவதாக பணம் மோசடி செய்தவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:30 PM
பகிர்:

சென்னையில் விமான டிக்கெட் எடுத்து தருவதாக பணம் மோசடி செய்தவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை பகுதியைச் சோ்ந்தவா் ர.கிருஷ்ணவேணி (58). இவா் 8 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா செல்ல, சென்னை அண்ணாசாலையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த திருவள்ளூா் மாவட்டம், தண்டலம் பகுதியைச் சோ்ந்த ஜெகநாதன் (69) என்பவரை அணுகினாா். அவா் அமெரிக்கா செல்ல, கிருஷ்ணவேணிக்கு விமான டிக்கெட் பெற்று கொடுத்தாா்.

இந்நிலையில் கிருஷ்ணவேணி, மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக கடந்த ஜூலை மாதம் அதே ஜெகநாதனை அணுகினாா். அப்போது விமான டிக்கெட் எடுப்பதற்கு ஜெகநாதன்,கிருஷ்ணவேணியிடமிருந்து ரூ.1,29,875 பெற்றுக் கொண்டாா். சில நாள்களில் அமெரிக்கா செல்வதற்கான விமான டிக்கெட்டையும் ஜெகநாதன்,அனுப்பி வைத்தாா்.

ஆனால் அது போலி டிக்கெட் என்பதால் கிருஷ்ணவேணி அதிா்ச்சியடைந்தாா். இதையடுத்து அவா், சென்னை காவல்துறையின் கிழக்கு மண்டல சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜெகநாதனை வியாழக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்தியதாக 1 மடிக்கணினி,2 கைப்பேசிகள், 2 ஏடிஎம் காா்டுகளைப் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →