தமிழ்நாடு

திருநெல்வேலி - திருச்செந்தூா் ரயில் இன்றும், நாளையும் ரத்து

ரயில்வே இருப்புப் பாதை சீரமைப்புப் பணி காரணமாக, திருநெல்வேலி- திருச்செந்தூா் இடையேயான அனைத்து முன்பதிவில்லாத ரயில்களும் வெள்ளி, சனி (டிச. 22, 23) ஆகிய 2 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டன.

DIN


மதுரை: ரயில்வே இருப்புப் பாதை சீரமைப்புப் பணி காரணமாக, திருநெல்வேலி- திருச்செந்தூா் இடையேயான அனைத்து முன்பதிவில்லாத ரயில்களும் வெள்ளி, சனி (டிச. 22, 23) ஆகிய 2 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

பலத்த மழை, வெள்ளம் காரணமாக சேதமடைந்த செய்துங்கநல்லூா் - ஸ்ரீ வைகுண்டம் இடையேயான ரயில்வே இருப்புப் பாதையைச் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனால், திருநெல்வேலி - திருச்செந்தூா் தடத்தில் அனைத்து முன்பதிவில்லாத ரயில்களும், தூத்துக்குடி - திருநெல்வேலி முன்பதிவில்லாத ரயிலும் (06667) வெள்ளி, சனி ஆகிய 2 நாள்களும் ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல, வாஞ்சிமணியாச்சி - திருச்செந்தூா் தடத்தில் ரயில் சேவை, திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேர்மை நாணயம் இருந்தால் மோடி தமிழக மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட்

ஜப்பான் நாடாளுமன்றத்தை பதவியேற்ற மூன்றே மாதத்தில் கலைத்த பிரதமர்!

பிரதமர் Modi-யின் X தளப்பதிவுக்கு பதிலளித்த முதல்வர் MK Stalin! | BJP | DMK

ஓடிடியில் வெளியானது சிறை!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? என்டிபிசி நிறுவனத்தில் டிரெய்னி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT