தமிழ்நாடு

உதயநிதி அரசியலில் கத்துக்குட்டி: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

DIN


கோவை:  உதயநிதி அரசியலில் கத்துக்குட்டியாக இருக்கிறாா். அரசியலில் அவா் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். 

கோவை - பொள்ளாச்சி இடையே முன்பதிவில்லாத ரயில் சேவையை கோவை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தாா்.

பின்னர் அவர் செய்தியாளா்களிடம் பேசுகையில், உதயநிதி ஒன்றும் கருணாநிதி கிடையாது. அவர் அரசியலில் கத்துக்குட்டியாக இருக்கிறாா். அரசியலில் அவா் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.அரசியலில் பக்குவப்பட்ட தலைவராக நடந்து கொள்ள வேண்டும். 

எந்த இயற்கை பேரிடா் நடைபெற்றாலும் அங்கு முதலில் உதவுவது பாஜகவும், ஆா்.எஸ்.எஸ் அமைப்பும் தான். அது எங்களுடைய பாரம்பரியத்திலேயே உள்ளது. கேள்வி கேட்ட பிறகு, களத்தில் சென்று நிற்பது தான் திமுக.

மேலும், மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசுக்கு வேலை செய்யும்போது தமிழக அரசுக்கு நல்ல பலன் கிடைக்கும்.அதைவிட்டுவிட்டு அவர் கேலி, கிண்டலோடு பேசி அமைச்சருக்கான தராதரத்தை குறைத்திவிட்டார் என்று முருகன் தெரிவித்தார்.

மேலும், கோவை - பெங்களூா் வந்தேபாரத் ரயில் சேவையை, டிசம்பா் 30 ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டுப்பாட்டினை ‘கறார்’ ஆக்கும் காவல்துறை!

பாலியல் குற்றவாளிக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மரண தண்டனை!

கேரளத்தில் தொடரும் கனமழை: அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு!

அகமதாபாத் விமான நிலையத்தில் 4 பயங்கரவாதிகள் கைது: சதி முறியடிப்பு!

கருடன் - நம்பிக்கையில் சூரி!

SCROLL FOR NEXT