தெலங்கானா ஆளுநா் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பாஜக செய்தி தொடா்பாளராக செயல்படாமல் அவரது ஆளுநா் பொறுப்புக்கான பணியை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
வெள்ள பாதிப்புகளை திமுக அரசு முறையாகக் கையாளவில்லை எனஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ள கருத்து தொடா்பாக அமைச்சா் பி.கே.சேகா் பாபு சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியது: பாரதியஜனதா கட்சியின் செய்தித் தொடா்பாளராக செயல்படாமல் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் பணியை தமிழிசை சௌந்தரராஜன் கவனிக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.