தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி 
தமிழ்நாடு

விஜயகாந்த் காலமானார்: கே.எஸ்.அழகிரி இரங்கல்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

DIN

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனை முன்பு நலம்பெற வேண்டி காத்திருந்த தொண்டர்கள் கேப்டன்... கேப்டன்... என தொண்டர்கள் கதறி அழுதனர். விஜயகாந்த் மறைவை அடுத்து அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், புரட்சிக் கலைஞருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். 

தமிழ் திரையுலகில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, தமிழ் மக்களின் பேராதரவை பெற்ற பெரும் கலைஞராக அவர் திகழ்ந்தார். அதேபோல, அரசியலில் கால் பதித்து புதிய பாதையில் பயணித்து தனக்கென தனி வாக்கு வங்கியை திரட்டி, அதன்மூலம் பல அரசியல் மாற்றங்களுக்கு கருவியாகத் திகழ்ந்தவர் விஜயகாந்த்.

விஜயகாந்த் அவர்கள் ஏழை,எளிய மக்கள் மீது மிகுந்த அன்பும், பரிவும் கொண்டவர். பழகுவதற்கு இனிமையானவர், பண்பாளர். மக்கள் நலத்திட்டங்களை ஆண்டுதோறும் கட்சியின் சார்பாக சிறப்புடன் தொடர்ந்து செய்து வந்தவர்.

விஜயகாந்த் அவர்களது மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கும், அரசியலுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலைத்துறையினருக்கும், தேமுதிக கட்சியினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT