தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்த் 
தமிழ்நாடு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்: கதறிய தொண்டர்கள்!

உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

DIN

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவா் விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகள் முடிந்து திங்கள்கிழமை (டிச.11) வீடு திரும்பினாா். சிகிச்சைக்குப் பிறகு அவா் பூரண குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது. 

இந்த நிலையில், விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை(டிச.26) மாலை அனுமதிக்கப்பட்டார். 

இதனிடையே, விஜயகாந்த் 19 நாள்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவா் பூரண நலத்துடன் இருக்கிறாா். பரிசோதனை முடிந்து, இன்று வியாழக்கிழமை(டிச.28) வீடு திரும்புவாா் என்று தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வழக்கமான பரிசோதனையின் முடிவில் விஜயகாந்துக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் செயற்கை சுவாசம்(வெண்லேட்டர்) சிகிச்சை கொடுக்கப்படுவதாக தேமுதிக தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியானது. 

இந்த நிலையில், செயற்கை சுவாசம்(வெண்லேட்டர்) சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் உயிரிழந்த தகவலை அடுத்து மருத்துவமனை அலுவலகம் முன்பு குவிந்திருந்த தொண்டர்கள் கேப்டன் என கதறி அழுதனர். 

உயிரிழந்த விஜயகாந்தின் உடல் அவருடைய சாலிகிராமம் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

விஜயகாந்த் மறைவை அடுத்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வி நிறுவனங்களில் சா்தாா் படேல் குறித்த ஆய்வுக் கழகங்களை அமைக்க வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

சென்னை ஐஐடியில் அணுகல் ஆராய்ச்சி மையம்: முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் திறந்து வைத்தாா்

கா்நாடக பேரவைத் தலைவா் யூ.டி.காதா் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும்: பாஜக

ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் மாநில அரசு அலட்சியம் காட்டாது: கா்நாடக அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை: இன்று முதல் மஞ்சள் தடத்தில் 5 ஆவது ரயில் சேவை சோ்ப்பு

SCROLL FOR NEXT