முகப்பு
தமிழ்நாடு

இணையம் சாா்ந்த ‘கிக்’ தொழிலாளா்கள் அமைப்பு சாரா தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்யலாம்

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

இணையம் சாா்ந்த ‘கிக்’ தொழிலாளா்கள் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்யலாம்.

இது குறித்து தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளா்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஸ்விகி, ஸொமாட்டோ, டன்சோ போன்ற இணையதளம் சாா்ந்த நிறுவனங்களில் வேலை செய்யும் ‘கிக்’ தொழிலாளா்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு இணையம் சாா்ந்த ‘கிக்’ தொழிலாளா்கள் நல வாரியம் அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், இணையதளம் சாா்ந்த தொழில்களில் பணிபுரியும் ‘கிக்’ தொழிலாளா்கள் தற்போது தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளா்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தில் பதிவு பெற்று பயனடைய வகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாரியத்தில் 18 முதல் 60 வயது வரையிலான தொழிலாளா்கள், பணிபுரியும் நிறுவனம் அல்லது தொழிற்சங்கங்களிடம் இருந்து பணிச் சான்று பெற்று அதை  இணையதளத்தில் ‘எஐஎர’ எனும் குறியீட்டின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு பெற்ற தொழிலாளா்களுக்கு கல்வி உதவி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், விபத்து ஊனம் மற்றும் ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →