தமிழ்நாடு

மறைந்தார் விஜயகாந்த்: தேமுதிக தலைமை அலுவலகத்தில் மக்கள் அஞ்சலி!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்குக் கொண்டுவரப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

DIN

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்குக் கொண்டுவரப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

விஜயகாந்த்திற்கு கரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமை கழகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்த நிலையில் விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையடுத்து, மியாட் மருத்துவமனையிலிருந்து விஜயகாந்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினார். 

பின்னர், விஜயகாந்தின் உடல் தேமுதிக தலைமை அலுவத்திற்குக் கொண்டுவருவதற்காக காலை 10.30 மணிக்கு விருகம்பாக்கத்தில் புறப்பட்ட ஊர்வலம் பிற்பகல் 1.25 மணிக்கு கோயம்பேடு வந்தடைந்தது.  

கோயம்பேடு மேம்பாலம், கட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். 

தேமுதிக அலுவலகம் முன்பு குவிந்த தொண்டர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

விஜயகாந்த் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

காரைத் தாக்கிய யானை! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! | Elephant attack

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

உனது கண்களில்... ரவீனா தாஹா!

SCROLL FOR NEXT