முகப்பு
தமிழ்நாடு

விஜயகாந்த் மறைவு: கோயம்பேட்டில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து, கோயம்பேட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:32 PM
பகிர்:

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து, கோயம்பேட்டில் கடுமையான  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த்திற்கு கரோனா தொற்று உள்ளதாகவும் சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமை கழகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை கோயம்போட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 4.30 மணிக்கு விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தேமுதிக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் சாலிகிராமத்தில் இருந்து கட்சி அலுவலகத்துக்கு கொண்டுவரப்படும் நிலையில், கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →