தமிழ்நாடு

அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

DIN

அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவத்துள்ளது. 

இதுகுறித்து அம்மையம் கூறியிருப்பதாவது, இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. 

இதனிடையே நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம், புதுக்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் ஜன.1 மற்றும் 2ஆம் தேதிகளில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் கனமழையுக்குக்கும் 3ஆம் தேதி தென்தமிழகம், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவீதா மருத்துவக் கல்லூரியில் மாணவா்களுக்கான உச்சி மாநாடு

திருவாரூரில் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு

பத்ரிநாத் கோயில் பக்தா்கள் வழிபாட்டுக்குத் திறப்பு

இன்று முதல் ஹஜ் பயணிகளுக்கான மருத்துவ முகாம்

மழை வெள்ளத்தில்...

SCROLL FOR NEXT