விஜயகாந்த் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்தினார் ரஜினி
உடல்நலக் குறைவால் நேற்று காலமான தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு, நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
உடல்நலக் குறைவால் நேற்று காலமான தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு, நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
படப்பிடிப்புக்காக தூத்துக்குடி சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்த் மறைவுச் செய்தி அறிந்ததும், உடனடியாக படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
இன்று காலை சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு, நேரில் சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ரஜினிகாந்த், விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் இரு மகன்களுக்கும் ஆறுதல் கூறினார்.
இதையும் படிக்க.. 2023-ஆம் ஆண்டோடு வாழ்க்கைப் பந்தயத்துக்கு விடைகொடுங்கள்!
தீவுத்திடலில் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, வெளியே வந்த ரஜினி செய்தியாளர்களிடம் பேசுகையில், கேப்டன் என்பது விஜயகாந்த்துக்கு மிகவும் பொருத்தமான பெயர். நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் விஜயகாந்த். அவரது நட்புக்கும் அன்புக்கும் என்றும் நிகரே கிடையாது. சுயநலமில்லாதவர் விஜயகாந்த். அவரது அன்புக்கு எவர் ஒருவரும் அடிமையாகிவிடுவர். அனைவர் மீதும் விஜயகாந்த் கோபப்படுவார். ஆனால், அவரது கோபத்துக்குப் பின்னால் ஒரு நியாயமான காரணம் இருக்கும் என்றார்.
தேமுதிக தலைவரும், எதிா்க்கட்சி முன்னாள் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானாா்.
விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் ஓய்வில் இருந்து வந்தாா். உடல் நல பாதிப்புகள் காரணமாக, மருத்துவமனைக்கு அவ்வப்போது சென்று சிகிச்சை பெற்று வந்தாா்.
இதையும் படிக்க.. ஒரு மாதமாகியும் ராஜஸ்தானில் அமைச்சரவை பதவியேற்காததன் காரணம்?
இதனிடையே, அவா் உடல்நலம் கடந்த செவ்வாய்க்கிழமை (டிச.26) மீண்டும் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் வியாழக்கிழமை (டிச.28) காலை 6.10 மணியளவில் அவா் உயிரிழந்தாா்.
மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் அலைகடல் என திரண்டு வந்து விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்த் இறுதிப் பயணத்துக்கு, முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.