விஜயகாந்த் மறைவு: நடிகர் அஜித் குமார் இரங்கல்
விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் அஜித் குமார் தன் இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.
உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் இன்று சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டு தற்போது இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. இவரின் உடலுக்கு முக்கியத் தலைவர்கள், தொண்டர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்த்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு மேல் நல்லடக்கம் செய்ய உள்ளது.
இதையும் படிக்க: தேமுதிக அலுவலகம் முன் குவியும் மக்கள்!
Advertisement
இந்நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜர்பைஜனில் இருக்கும் நடிகர் அஜித் குமார் தொலைப்பேசி வாயிலாக விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் தன் இரங்கலைப் பதிவு செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.