முகப்பு
தமிழ்நாடு

தீவுத்திடலில் இருந்து புறப்பட்டது விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து புறப்பட்டது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து புறப்பட்டது. 

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6.30 மணியளவில் அவரது உயிர்ப் பிரிந்தது. 

இவரின் உடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று காலை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. இவரின் உடலுக்கு முக்கியத் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். 

விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்ய உள்ளது. 

இறுதிச்சடங்கில் தமிழகரசு சார்பில் அமைச்சர்களான மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.