முகப்பு
தமிழ்நாடு

ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். 

Updated On : 30 டிசம்பர், 2023 at 6:58 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 7:03 PM

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். 

அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜகண்ணப்பன் முதல்வருடன் சென்றனர். நிலுவையிலுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்தியதாக தெரிகிறது. 

மசோதாக்கள் ஒப்புதல் தொடர்பாக இருவரும் அமர்ந்து பேசுமாறு உச்சநீதிமன்றம் யோசனை கூறியிருந்தது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலையடுத்து ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். 

Advertisement

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.