தமிழ்நாடு

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு

DIN

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த பேருந்து முனையத்திலிருந்து நெடுந்தூர தென் மாவட்ட முக்கிய நகரங்களுக்கு (எஸ்சிடிசி) 164 பேருந்துகளும், சென்னையில் உள்ள முக்கிய இடங்களுக்கு 2900 நடைகள் (எம்டிசி) இயக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கப்பட்ட கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை ஞாயிற்றுக்கிழமை(டிச.31) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் தலைவரும் (ம) இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு  முனையத்திலுள்ள நேரக் காப்பாளர் அறை, கண்காணிப்பு அறை, பேருந்துகளின் நடைமேடைகள் மற்றும் கழிவறை ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, இந்த பேருந்து முனையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும், பயணிகளுக்கான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், இதுவரை இந்த பேருந்து முனையத்திலிருந்து நெடுந்தூர தென் மாவட்ட முக்கிய நகரங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் (எஸ்சிடிசி) 164 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அதேபோல இந்த பேருந்து முனையத்திலிருந்து மாநகர போக்குவரத்து கழகம் மூலமாக சென்னையில் உள்ள முக்கிய இடங்களுக்கு 2900 நடைகள்  (எம்டிசி) இயக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, சி.எம்.டி.ஏ தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் சோ.ருத்ரமூர்த்தி, ந.ரவிக்குமார்,மாவட்ட வருவாய் அலுவலர் மு.இந்துமதி, அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன், பொது மேலாளர் வி.குணசேகரன், தலைமைப் பொறியாளர் சீனிவாச ராவ், செயற்பொறியாளர் திரு.ராஜன் பாபு மற்றும் காவல்துறை அலுவலர்கள்
உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT