இன்று மாலை வேட்பாளரை அறிவிக்கிறார் ஓ. பன்னீர்செல்வம் 
தமிழ்நாடு

இன்று மாலை வேட்பாளரை அறிவிக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் தங்களது அணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளரை இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கிறார் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்

DIN


சென்னை:  ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் தங்களது அணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளரை இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கிறார் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நிலவரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களின் சந்திப்பின்போது இன்று மாலை வேட்பாளரை ஓ. பன்னீர்செல்வம் அறிவிக்க இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா திடீர் மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளராக திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஏற்கனவே, ஈரோட்டில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த கே.எஸ்.தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக வேட்பாளர் அறிவிப்பை அரசியல் கட்சிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று காலை அதிமுக  அறிவிக்கப்பட்டுள்ளார்.  ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 122 காசுகள் உயர்ந்து ரூ.90.27ஆக நிறைவு!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான கனடா அணி விவரம்!

டி20 உலகக்கோப்பையில் புதுமுகம்: கால்பந்தாட்டப் பூமியிலிருந்து கிரிக்கெட் கனவுடன் ‘இத்தாலி!’

டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்!

SCROLL FOR NEXT