சத்யபிரதா சாகு (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மத்தியப்படை பாதுகாப்பு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 கம்பெனி மத்திய ஆயுதப்படை காவல் துறை பாதுகாப்பு வழங்கவுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

DIN

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 கம்பெனி மத்திய ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் துறை பாதுகாப்பு வழங்கவுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 13ஆம் தேதி முதல் மத்திய ஆயுதப்படை காவல் துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா திடீர் மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.

வேட்பாளராக திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஈரோட்டில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த கே.எஸ்.தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT