கே. அண்ணாமலை 
தமிழ்நாடு

ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும்; பாஜக போட்டியிடாது: அண்ணாமலை

இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிட வேண்டும் என பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

DIN

இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிட வேண்டும் என பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,

''கூட்டணி கட்சி விவகாரங்களில் தடையிடுவதில்லை என்பது பாஜகவின் நிலைப்பாடு. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும். அதையே பாஜகவும் விரும்புகிறது. 

ஈரோடு இடைத்தேர்தலில் நிறுத்தப்படும் பொது வேட்பாளருக்கு முழு ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளோம். அதிமுக இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும். திமுகவுக்கு எதிராக அது கூடுதல் பலம் கொடுக்கும்.

இடைத்தேர்தலில் அதிமுக இணைந்து செயல்பட வேண்டும் என ஓபிஎஸ்ஸிடம் தொலைப்பேசி வாயிலாக பேசினேன். அதைத் தொடர்ந்து நேற்று (பிப். 3) நேரிலும் சென்று பேசினோம். 

எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளதால், அவருக்கு ஆதரவளிப்போம் என ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டுக்கொண்டேன்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக பிரிந்து இரு அணிகளாக இருந்தால், வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும்.

அதிமுக சார்பில் ஒரு வேட்பாளரை இரட்டை இலை சின்னத்தில் நிற்கவைத்தால், பாஜக முழுமையாக களப்பணி செய்து வெற்றிபெற உழைக்கத்தயாராக உள்ளது.  எங்கள் நிலைப்பாட்டை  தெரிவித்துள்ளதால், இன்று மாலைக்குள் நல்ல முடிவு  கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்'' என்று குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூரியவன்ஷி அதிவேக டெஸ்ட் சதம்! 78 பந்துகளில் சதமடித்து ஆஸி.யை அலறவிட்ட சிறுவன்!

40 வயதில் மீண்டும் கருவுற்ற பாலிவுட் நடிகை!

விஜய் பிரசாரம் 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு: தவெக

ரூ. 12,490 கோடி! உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்!

அன்பின் வழியில்... அக்‌ஷதா!

SCROLL FOR NEXT