தமிழ்நாடு

திமுகவில் இணைந்த பாஜக பட்டியலின பிரிவு மாநிலப் பொதுச்செயலர் 

பாஜக பட்டியலின பிரிவு மாநிலப் பொதுச்செயலர் என்.விநாயகமூர்த்தி இன்று திமுகவில் இணைந்தார். 

DIN

பாஜக பட்டியலின பிரிவு மாநிலப் பொதுச்செயலர் என்.விநாயகமூர்த்தி இன்று திமுகவில் இணைந்தார். 

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில், பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் (பட்டியல் அணி) என்.விநாயகமூர்த்தி தலைமையில் ஈரோடு மாவட்ட பா.ஜ.க. இளைஞர் அணிச் செயலாளர் வி.வெங்கடேஷ் - மதுரைவீரன், மக்கள் இளைஞர் அணிச் செயலாளர் பழ.வீரக்குமார் ஆகியோர் பாஜ.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.

தொடர்ந்து என்.விநாயகமூர்த்தி தனது அறிக்கையில், ஈரோடு கிழக்கு தொகுதியில், எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த  சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர்களாக உள்ளனர். இவர்கள் அத்தனை பேரையும், நடைபெற உள்ள இடைத் தேர்தலில், முதல்வர் ஸ்டாலின் ஆசிபெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களிப்பார்கள்.

இத்தொகுதி முழுவதும் முழு வீச்சுடன், தீவிர களப்பணியாற்றி மாபெரும் வெற்றியை பெற வைத்து, கழகத் தலைவர் அவர்கள் கரத்தில் ஒப்படைப்பேன் என்று இந்நேரத்தில் உறுதி கூறுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT