தமிழ்நாடு

தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் தெப்பத் தேரோட்டம்

அரோகரா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

DIN

சேலம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் தெப்பத் தேரோட்டம் நடைபெற்றது. அரோகரா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் சிற்பக்கலைக்கு வரலாற்று புகழ்பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தெப்ப தேர் விழா நடைபெற்றது. சுவாமி அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்து தெப்ப குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அமர வைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.

பக்தர்கள் அரோகரா கோசங்களுடன் சுவாமியை வணங்கினர். இந்தத் தேரோட்ட திருவிழாவை காண ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி, கருப்பூர், ராசிபுரம், சின்னப்பம்பட்டி, இளம்பிள்ளை, நங்கவள்ளி, மேட்டூர், உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  வழிப்பட்டனர். 

இந்த விழாவிற்கு துணை கண்காணிப்பாளர் சங்கீதா, ஆய்வாளர் தொல்காப்பியன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேனியில் செப்.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மதுப் புட்டிகளை பதுக்கிய முதியவா் கைது

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நாளை மின்தடை

இந்தியா்களுக்கு ஏமாற்றம்

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மாணவா்களுக்கு காய்ச்சல்

SCROLL FOR NEXT