தங்கம் ஒரு சவரன் ரூ.42,720-க்கு விற்பனை!
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.160 உயர்ந்துவிற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.160 உயர்ந்துவிற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த இரண்டு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.
இந்நிலையில், பிப்ரவரி 11-ம் தேதி காலை நிலவரப்படி இன்று சற்று உயர்ந்துள்ளது.
அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,340ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம், வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.72.70 ஆகவும், ஒரு கிலோ ரூ.200 உயர்ந்து ரூ.72,700 ஆக விற்பனை செய்யப்படுகிறது.