தமிழ்நாடு

வழக்கு விசாரணையில் ஆள்மாறாட்டம்: தம்பிக்காக ஆஜரான அண்ணன் கைது!

DIN

சீர்காழி அருகே இருசக்கர வாகன விபத்து வழக்கு விசாரணையில் தம்பிக்கு பதில் ஆஜராகி ஆள் மாறாட்டம் செய்த அண்ணனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து தொடர்பாக சீர்காழி போலீசார் வழுதலைகுடி கிராமத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இது வழக்கின் விசாரணை தற்போது சீர்காழி  நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு அசோக் ஆஜராக வேண்டும். ஆனால் அவருக்கு பதில் அவரது அண்ணன் குணசேகரன் (43) என்பவர் ஆஜராகி ஆலுமாராட்டம் செய்துள்ளார்.

நேற்று முன்தினம் மீண்டும் குணசேகரன் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் குணசேகரனை கைது செய்து சீர்காழி காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் அசோக் வேலைக்காக வெளிநாடு சென்றதால் அவருக்கு பதில் அவரது அண்ணன் குணசேகரன் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி ஆள் மாறாட்டம் செய்தது தெரியவந்துள்ளது.

மேலும், நீதிமன்ற விசாரணையில் ஆள் மாறாட்டம் நடைபெற்றுது குறித்து வழக்குரைஞர் திருஞானம் மற்றும் சீர்காழி நீதிமன்ற காவலர்களிடம் விசாரணை  நடத்தப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலி, ரஜத் படிதார் அதிரடி; பஞ்சாப் கிங்ஸுக்கு 242 ரன்கள் இலக்கு!

இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: லெபனானில் 4 பேர் பலி!

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிகை 10ஆக உயர்வு

ராகுலுக்கும், மோடிக்கும்தான் நேரடிப் போட்டி: அமித் ஷா

SCROLL FOR NEXT