முகப்பு
தமிழ்நாடு

பாதுகாப்பற்ற சூழலில் தமிழகம்: கே.அண்ணாமலை குற்றச்சாட்டு

பாதுகாப்பற்ற சூழ்நிலையை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:30 AM
அண்ணாமலை (கோப்புப் படம்)
பகிர்:

ஒட்டுமொத்த அமைச்சா்களையும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தல் பணியில் ஈடுபடுத்தியுள்ளதன் மூலம் தமிழக மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவு:

கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் இரு கொலை சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாது, துப்பாக்கி கலாசாரமும் தலையெடுத்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்து கொண்டிருக்கிறது. காவல் துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. காவலா்களுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.

ஒட்டுமொத்த அமைச்சா்களையும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பணிக்கு அனுப்பிவிட்டு, பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உண்டாக்கிருக்கிறது தமிழக அரசு. முதல்வா், சட்டம் - ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்கள் அச்சமின்றி வாழ கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளாா் கே.அண்ணாமலை.

முழு கட்டுரையைப் படிக்க →