தமிழ்நாடு

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் மாசித் திருவிழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

DIN

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் மாசித் திருவிழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து  காலை 5.18 மணிக்கு கொடிமரத்தில் காப்பு கட்டிய ச.பாலசுப்பிரமணியன் வல்லவராயர் திருவிழாக் கொடியினை ஏற்றினார். 

அதன்பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகாதீபாராதனை நடைபெற்றது.

திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளளனர்.

கொடியேற்று நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT