ஈரோடு இடைத்தேர்தல் ஏற்பாடுகள்: தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து காணொலிக் காட்சி வாயிலாக இன்று ஆலோசனை நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து காணொலிக் காட்சி வாயிலாக இன்று ஆலோசனை நடைபெற்றது.
வருகின்ற 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைமைத் தேர்தல் ஆணையர் அஜய் பாதூவுடன் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரகு சாகு ஆலோசனையில் ஈடுபட்டார்.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுன்னி, தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.